Colony Wiki: Earthquakes have a power similar to a hydrogen bomb

Home | Edit | Index | Recent Changes

Home
About
Order
Contact
Faq

 

ஹைதராபாத்:

குஜராத் மாநிலம் பூஜ் நகரைத் தாக்கிய பூகம்பம், ஹைட்ரஜன் குண்டு வீச்சுக்குச் சமமானது பூகம்பம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பூகம்பத்தால் பூஜ் நகரமே இடிந்து தரைமட்டமானது. அகமதாபாத் உள்ளிட்ட மேலும் பல நகரங்களும், ஏராளமான கிராமங்களும் பூகம்பத்தால்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பூகம்பத்தின் தன்மை குறித்து இப்போது புதிய கருத்து வெளியாகியுள்ளது. ஹைட்ரஜன் குண்டு வெடித்தால் என்ன சக்தி இருக்குமோ, அதே அளவிலானபாதிப்புதான் இந்த பூகம்பத்திற்கும் உள்ளதாக ஹைதராபாத்திலுள்ள தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஹர்ஷ் குப்தா கூறியுள்ளார்.

குப்தா கூறுகையில், ஆயிரக்கணக்கில் மக்களைப் பலிவாங்கிய இந்த நிலநடுக்கம், 5.3 மெகா டன் ஹைட்ரஜன் குண்டை வீசினால் எவ்வளவு பாதிப்புஏற்படுமோ அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூஜ்ஜை மையமாகக் கொண்டு ஏற்பட்ட பூகம்பம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த பூகம்பம் உலகின் தெற்குப்பகுதியில் உள்ள அன்டார்டிகாவில் மைத்ரிஎன்ற இடத்தில் உள்ள ஆய்வு நிலையத்தில் பதிவாகியுள்ளது.

குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஹைதராபாத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் 5.9 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு குஜராத்தில் பூமிஅதிர்ச்சி நீடிக்கும் என்றார் ஹர்ஷ் குப்தா.

References:

  • thatstamil.oneindia.in/news/2001/01/30/hydrogen.html
  • Hydrogen

Fresh copy to be cached until 9:08:29 PM

A Hive Wiki enables web pages to be written collectively in a simple markup language using a web browser. A single page in a Hive Wiki is referred to as a "wiki page", while the entire body of pages, which are usually highly interconnected via hyperlinks, is "the wiki"; in effect, a Hive Wiki is actually a very simple, easy-to-use user-maintained database for searching or even creating information. Start New Free And Easy Hive Wiki Today!

This Page: Edit | History
This Wiki: Home | Related To Earthquakes_have_a_power_similar_to_a_hydrogen_bomb | Index | Recent Changes | Random Page | Search
Login | Create New Wiki | Wiki List

© Copyright 2002-2008 BookAX. All Rights Reserved.
edit

31ms